Followers

Tuesday, July 29, 2008

அவனும் வந்தான் கல்லூரிக்கு

எதிர்காலத்தின் முகவரி தேடி
நாங்கள் - நிகழ்காலம்தேடி அவன்

பெற்றோரின் தலையில் சுமை வைத்து
சுற்றி திரிந்த எங்களுடன் - அவன்
குடும்ப சுமை குறைந்தளவு குறைக்க

ஈன்றவர்களின் வியர்வையெல்லாம்
நறுமனமாய் எங்கள் சட்டையில் - தன்
வியர்வையில் வீட்டிற்கே நறுமணம் அளிக்க

புத்தகம் தூக்காமல்
புதுச்சட்டை அணியாமல்
உயர்நிலை கற்காமல்
ஒன்பது அகவை தாண்டாமல்
அவனும் வந்தான் கல்லூரிக்கு
உணவகத்தில் தட்டு கழுவும் வேலைக்கு ..

2 comments:

Paul said...

too good...

பொதுநல உணர்வுள்ள மனிதர்களுக்கே பொங்கி வரும் எண்ணங்களின் எழுத்து வடிவம்...

as usual, you need to concentrate on how to break the lines...

for eg:

"எதிர்காலத்தின் முகவரி தேடி
நாங்கள் - நிகழ்காலம்தேடி அவன்"

இந்த வரிகளை,

எதிர்காலத்தின் முகவரி தேடி -
நாங்கள்...
நிகழ்காலம் தேடி -
அவன்...

அந்த மாதிரி பிரிச்சு எழுத முயற்சிப் பண்ணு...

J said...

முக‌வ‌ரி தேடி
அலைந்துகொண்டிருந்தேன்..
யாருக்கும் அவ்வ‌ள‌வாக‌
தெரியவில்லை..

வ‌ருவோர் போவோரிட‌ம்
கேட்டுப்பார்த்தேன்..
விடையாக த‌வ‌றான‌ வ‌ழிக‌ள் ‌..
வேடிக்கை ம‌னித‌ர்க‌ள்..!

கால்க‌ள் வ‌லி ருசித்த‌து.!
உட‌ல் ந‌னைத்த‌ விய‌ர்வை
தொண்டையை ந‌னைக்க‌ தெரிய‌வில்லை..!

முக‌வ‌ரி தேடி
அலைந்த‌ என்னிட‌ம்
முக‌ம் தெரியாத‌வ‌ர்
முக‌வ‌ரி கேட்டார்..!

அறிமுக‌ம் ப‌டுத்திக்கொண்டொம்..
முக‌வ‌ரி சொல்ல‌‌
ம‌றுக்க‌ வில்லை..

முக‌வ‌ரி தந்த‌ என்னை
யாருக்குமே
அறிமுக‌ப‌டுத்துவ‌தில்லை...

இப்ப‌டிக்கு
த‌மிழ்.

அறிமுக‌ப‌டுத்துங்க‌ள்
உங்க‌ள் அடுத்த‌ க‌விதையில்..

ஜெ
paul's Friend..