Followers

Tuesday, July 29, 2008

அவனும் வந்தான் கல்லூரிக்கு

எதிர்காலத்தின் முகவரி தேடி
நாங்கள் - நிகழ்காலம்தேடி அவன்

பெற்றோரின் தலையில் சுமை வைத்து
சுற்றி திரிந்த எங்களுடன் - அவன்
குடும்ப சுமை குறைந்தளவு குறைக்க

ஈன்றவர்களின் வியர்வையெல்லாம்
நறுமனமாய் எங்கள் சட்டையில் - தன்
வியர்வையில் வீட்டிற்கே நறுமணம் அளிக்க

புத்தகம் தூக்காமல்
புதுச்சட்டை அணியாமல்
உயர்நிலை கற்காமல்
ஒன்பது அகவை தாண்டாமல்
அவனும் வந்தான் கல்லூரிக்கு
உணவகத்தில் தட்டு கழுவும் வேலைக்கு ..

விலை மாது

பலர் காமப்பசி தீர்த்து
தன் பசி போக்கியவள்

ஒருநாளில் பல முதலிரவு
இவள் மனம் ஏங்கும்
எப்போது என் கடை இரவு

பகலில் சூரிய மஞ்சள்
இரவில் மேக மல்லிகை சூடி
உலா வரும் பெண் நிலா

பலருக்கு பரிசோதனைகூடம்
சிலருக்கு சவக்கிடங்கு

தன் கணவர்களிடம்
ஜாதி,மதம்
பார்த்திடாத சமத்துவ நாயகி.......!!





Monday, July 28, 2008

ஏழை

மழை வேண்டி பிரார்த்தனை ..
மனதில் சட்டென்று கனம்
வைத்து செல்லும்...
எல்ல இடமும் ஒழுகும் என் குடிசை...

கருவறைகாதலி..

நான் இதயம் தொலைத்தேன்
என்றறிந்தாலும் அவளுக்குள்
என்னை வைத்த என் தாய் ...

Friday, July 25, 2008

தாய்

என்னை உலகிற்கும்
உலகில் பல எனக்கும்...
அறிமுகம் செய்தவள்

தாய்ப்பாலில் சுவை
தாலாட்டில் இசை
மார்பணைப்பில் சுகம்
செல்ல அடியில் வலி
கொஞ்சலில் மொழி -பால்சோறு
கெஞ்சலில் வான் நிலா..
இன்னும்..

என் சினுங்கல் அவளுக்கு சிம்போனி
கிறுக்கல் ஓவியம்
தள்ளாட்டம் நாட்டியம்
எச்சில் சோறு தேன்
பிதற்றல் இலக்கியம.

அஷனமே கொல்லும்
நஞ்சும் அவள் கைப்பட
மாறிவிடும் அமிழ்தம் ...

ஈடு இனை இல்லாத பஞ்சனை
அவள் மடியனை
ஒரு நொடி அவள் மடி
உலககவலை மறக்கசெய்யும் .....

பட்டு
கம்பளமும் தகுதி இழக்கும்
அவள் வியர்வை வாசம் படிந்த
சேலைக்கு முன்..

தரணியில் உருவகம் இல்லதவள்
உலகிற்கு உருவகம் ஆனவள் ....