Followers

Saturday, December 14, 2013

சிறுபிள்ளைத்தனம்

என் முதல் ரசிகனுக்கு ,

உன் முதல் ரசிகனின் ...

சிறுபிள்ளைத்தனம்

இது கவி அல்ல...

உன்னை பற்றி எழுத அமர்ந்தால்...

திரை மறையும்  வார்த்தைகள் 

தாழ்வு மனப்பான்மை கொண்டு..

காகிதம் இறங்க மறுக்கும் 

பேனா வெட்கத்துடன் ..

இருந்தாலும்இழுத்துவந்தேன்...

வாருங்கள்... மலருக்கு அதன் 

மென்மைகென பூங்கொத்து

கொடுத்து வரலாமென இச்சிறுபிள்ளை தனத்தோடு ……


  • ஆயிரம் குழந்தைகள் 

ஒன்றாக  வயலின் வாசிப்பார்கள்  உன் சிரிப்பில்  
  • எப்படி நெளிந்தாலும் 
உன் புள்ளிகளுக்குள்  தான் நான் கோலமாகிறேன்  
  • என் கனவு திரைப்படங்களின் காதல்  பொழுதுகளின்

 படச்சுருள்கள் கிழித்தெறியபடுகிறது உன்னால் ..
  • உயிரை சாட்டையில் சுற்றி  

சுழற்றும்  கண்கள்

நெருங்க குளிர செய்யும்

கார் கூந்தல்..

அசைவால்  உயிர் கொன்று...'

உணர்வுகள் ஜனனம் செய்யும் கவர்ச்சி

தேன் வாயில் நிரப்பி

வார்த்தையாய்  உமிழும் ஜாலம்

ஒன்றும் இல்லை உன்னிடம்

இருந்தாலும் .. என் ரசனைகளின்

மதிப்பெண் பட்டியலில்...

என்னவளை விட அதிகமாய் நீ...
  • எப்போதும் பணிகிறேன் உன்னிடம் 
காற்றிடம்  ஊடல் கொண்டு 

சலனத்தோடு  மடங்கும்  தென்னங்கீற்றாய் 
  • சில நேரம் சில குணங்கள் 
வெளிப்படும் போது  தெரிபவை 

உன்னை பதிவெடுத்த  சுவடுகள்  


  • என்னையும்  விரட்டி ...விரட்டி 
காதலிப்பவை  உன் நினைவுகள்..
  • இது கவிதை அல்ல,,
அவை உண்மை போர்த்திய  பொய்கள் 

இவற்றில்  ஒன்றும் பொய்யில்லை...


 
ஒருமுறை நானும் நண்பன்  பிராங்க்ளினும்  பேசி கொண்டிருந்த போது ..ஏன்டா ஜானி எப்ப பாத்தாலும் கவிதை  எழுதுறியே  என்ன பத்தி ஒரு கவிதை எழுத கூடாதா என்றான்..அப்போது எழுதியது தான்  இந்த சிறுபிள்ளைத் தனம் என்ற சிறு கவிதை 

என்னை விட அவனை அதிகமாக ரசித்தவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை .. அவன் மனைவி உட்பட..அவனுடைய கோபம்,சோம்பல், மறதி,அறியாமை,கள்ளம்,நடை, பாவனை,கருவிழி மறைத்து இமை மூடி சிரிக்கும் சிமிட்டல் சிரிப்பு,இவன் அனைத்தும் என்னால் இல்லை ....எங்கள் நண்பர் கூட்டம்  டெரிக் ,மற்றும் சத்யாவாலும் ரசிக்கபட்டிருக்கிறது .
இன்று வரை என் சுக துக்கத்திற்கு நான்  பொருள் தேடும் முதல் அகராதி அவன் தான் . நான் என்ன மன நிலையுடன் அவனிடம்  ஒரு பிரச்சினையை சொல்கிறேன் என்பதை அறிந்து அதற்க்கு எது தீர்வு,,அந்த தீர்வை எப்படி என்னிடம்  சொல்ல வேண்டும் என்பதை நன்கு அறிந்து எனக்கு பதில் சொல்பவன்..சிலருக்கு அவனை ஒரு  நல்ல இசையாளானாக  மட்டுமே தெரியும் ஆனால்  அவன் ஒரு அசாத்தியமான  கவிஞன்  ..இசையும் , மற்ற பலஅலுவல்களும்  தான்  அவனிடமிருந்து  பல கவிகளை  களவாடி தீயிட்டு சாம்பலாக்கி  இருக்கின்றன . இந்த பிறந்த நாளில் நண்பனுக்கு ஒரு வேண்டுகோள் .. கருவிகள்  மீட்டும் கையால்  சில நேரம் பேனாவையும் மீட்டு.நல்ல கவிதைகள் கிடைக்கும் தமிழ்  கூறும் நல் உலகுக்கு...

நிச்சயமாக இந்த பதிவை படித்தவுடன் அவன் என்னை அழைத்து கட்டாயம் திட்டுவான்.. இருந்தாலும்  என்றாவது நட்பு என்ற இலக்கியம் என்னால்  எழுத நேரிடுமாயின் பிராங்க்ளின்..சத்யா..டெரிக், சாம்..என்ற வார்த்தைகள் இல்லாமல் எழுதவே முடியாது..அதில் பிராங்க்ளின் அதிக இடங்களில் நான் பிரயோகித்த  வார்த்தையாக இருக்கும்