Followers

Saturday, November 22, 2008

தவணை மரணம்...

வீதியை கடந்திடும்
ஒவ்வொரு முறையும்...
முற்றத்து வீட்டின்
கொடியில் காய்ந்திடும்
குழந்தையின் துணிகள்
என் மலட்டு கர்ப்பம் தட்டி
உயிர் கொன்று செல்லும்
அவஸ்தையை யாரிடம்
போய் சொல்ல ........

Wednesday, November 19, 2008

கேளீர்......

தாய் பேருந்தின்
ஜன்னல் ஓரம்,
மடி அமர்ந்த குழந்தை
சிரித்துக்கொண்டே கையசைத்ததது
சாலையில் போகிற
எல்லோரையும் பார்த்து ..
பாரபட்சமின்றி .......!!!!!

Tuesday, November 4, 2008

அடி வாழை,,,,,,

நாணம் தவிர்,

கொஞ்சி பேசு,

ஆடை குறை,

நெளிவுடன் நட,

பார்வையில் இழு,

பேச்சில் உருக்கு ,

பணம் நினை ,

கற்பை துற,

உன் சுய கனவுகள் மற.......

அம்மாவின் அறிவுரை இது !!!!!!!!

நடிகையின் மகளாய் நான் ....

Saturday, September 13, 2008

கனாக்காலம் ....

வருமா ? மீண்டும்
அந்த நாள், நாழிகை..

தாயிடம் அடிவாங்கி
அழுது கொண்டு
அகரம் படித்த நாள் ..

அப்பா கொடுத்த
ஒரு ரூபாய் நோட்டு
ஒரு வாரம் சட்டைபையில்
வைத்திருந்த நாள்..

தீபாவளி புதுசட்டையுடன்
ஊர் முழுதும் ஒய்யாரம்
காட்டி வந்த நாள்..

பொய் துப்பாக்கியில்
நண்பன் சுட
சடலமென சரிந்த நாள் ..

மணல் வீட்டுக்கு
மாவிலை தோரணம்
திறப்பு விழா கண்ட நாள் ..

தங்கையிடம் சண்டையிட்டு
காயா ? பழமா ?
கேட்ட நாள்..

ஐம்பது காசு
வாடகை சைக்கிளில்
வித்தைகள் பல காட்டிய நாள் ..

வயிற்று வலியும் ,
தலை வலியும் ,
சேர்ந்து வரும்
திங்கள் கிழமை நாள்..

ஆண்டு தேர்வில்
கடைத்தேர்வை
எதிர்பார்த்த நாள் ...

போலீஸ் எங்க மாமா
என்ற நண்பன் ,
இன்ஸ்பெக்டர் எங்க மாமா
என பொய்யுரைத்த நாள் ..

முன் இருக்கை
கமலா சட்டையில் மைதெளித்து
திரும்பிய அவளை
அப்பாவியை பார்த்த நாள்..

இன்று....
தொலைந்த இன்பமாய்..
கலைந்த காலம்..........
இனிமையாய்...
நினைவலையில்........மட்டும் !!!

Tuesday, July 29, 2008

அவனும் வந்தான் கல்லூரிக்கு

எதிர்காலத்தின் முகவரி தேடி
நாங்கள் - நிகழ்காலம்தேடி அவன்

பெற்றோரின் தலையில் சுமை வைத்து
சுற்றி திரிந்த எங்களுடன் - அவன்
குடும்ப சுமை குறைந்தளவு குறைக்க

ஈன்றவர்களின் வியர்வையெல்லாம்
நறுமனமாய் எங்கள் சட்டையில் - தன்
வியர்வையில் வீட்டிற்கே நறுமணம் அளிக்க

புத்தகம் தூக்காமல்
புதுச்சட்டை அணியாமல்
உயர்நிலை கற்காமல்
ஒன்பது அகவை தாண்டாமல்
அவனும் வந்தான் கல்லூரிக்கு
உணவகத்தில் தட்டு கழுவும் வேலைக்கு ..

விலை மாது

பலர் காமப்பசி தீர்த்து
தன் பசி போக்கியவள்

ஒருநாளில் பல முதலிரவு
இவள் மனம் ஏங்கும்
எப்போது என் கடை இரவு

பகலில் சூரிய மஞ்சள்
இரவில் மேக மல்லிகை சூடி
உலா வரும் பெண் நிலா

பலருக்கு பரிசோதனைகூடம்
சிலருக்கு சவக்கிடங்கு

தன் கணவர்களிடம்
ஜாதி,மதம்
பார்த்திடாத சமத்துவ நாயகி.......!!





Monday, July 28, 2008

ஏழை

மழை வேண்டி பிரார்த்தனை ..
மனதில் சட்டென்று கனம்
வைத்து செல்லும்...
எல்ல இடமும் ஒழுகும் என் குடிசை...

கருவறைகாதலி..

நான் இதயம் தொலைத்தேன்
என்றறிந்தாலும் அவளுக்குள்
என்னை வைத்த என் தாய் ...

Friday, July 25, 2008

தாய்

என்னை உலகிற்கும்
உலகில் பல எனக்கும்...
அறிமுகம் செய்தவள்

தாய்ப்பாலில் சுவை
தாலாட்டில் இசை
மார்பணைப்பில் சுகம்
செல்ல அடியில் வலி
கொஞ்சலில் மொழி -பால்சோறு
கெஞ்சலில் வான் நிலா..
இன்னும்..

என் சினுங்கல் அவளுக்கு சிம்போனி
கிறுக்கல் ஓவியம்
தள்ளாட்டம் நாட்டியம்
எச்சில் சோறு தேன்
பிதற்றல் இலக்கியம.

அஷனமே கொல்லும்
நஞ்சும் அவள் கைப்பட
மாறிவிடும் அமிழ்தம் ...

ஈடு இனை இல்லாத பஞ்சனை
அவள் மடியனை
ஒரு நொடி அவள் மடி
உலககவலை மறக்கசெய்யும் .....

பட்டு
கம்பளமும் தகுதி இழக்கும்
அவள் வியர்வை வாசம் படிந்த
சேலைக்கு முன்..

தரணியில் உருவகம் இல்லதவள்
உலகிற்கு உருவகம் ஆனவள் ....

Thursday, June 12, 2008

அம்மா

......அம்மா.....

நான் எழுதாமல் படிக்காமல் சொன்ன

முதல் கவிதை...