பலர் காமப்பசி தீர்த்து
தன் பசி போக்கியவள்
ஒருநாளில் பல முதலிரவு
இவள் மனம் ஏங்கும்
எப்போது என் கடை இரவு
பகலில் சூரிய மஞ்சள்
இரவில் மேக மல்லிகை சூடி
உலா வரும் பெண் நிலா
பலருக்கு பரிசோதனைகூடம்
சிலருக்கு சவக்கிடங்கு
தன் கணவர்களிடம்
ஜாதி,மதம்
பார்த்திடாத சமத்துவ நாயகி.......!!
1 comment:
நான் ரொம்ப நாட்களாக விலைமாது என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுத வேண்டும் என்று நினைத்துக்கு கொண்டிருக்கிறேன்... எனகென்னவோ இந்த கவிதையில் இன்னும் நிறைய சொல்லப்பட வேண்டும் என்று தோன்றுகிறது...
என்னவென்று தெரியவில்லை, ஆனால் எதோ ஒன்று குறைகிறது அந்த கவிதையில்...
Post a Comment