Followers

Tuesday, November 30, 2010

ஜாதிகள் இருக்கிறதடி பாப்பா !!!!

இல்லை என்று சொன்னவரெல்லாம்
தனித்தனியாய் சிரிக்கிறார் ,
அவரவர் ஜாதி சுவரொட்டிகளில் !!!!

Sunday, November 28, 2010

மழலையர் பள்ளிசாலை...

# காலையில் அழுகையும்
மாலையில் குதூகல கூச்சலும் சங்கமிக்கும்.

# குச்சி ஐசும்,பஞ்சு மிட்டாயும்
இலந்தை வடையும் , கீற்று மாங்காயும்,
குழாய் அப்பளமும் பெரு வணிகமாகும்.

# சிலேட்டு குச்சியும்
காகித பென்சிலும்
மாற்று பொருளாகும்.
# அரை சீவல் தலையும், ஒழுகும் மூக்கும்
அம்மா இடை அமர்ந்து அக்கா அழுகை ரசிக்கும்.

#தந்தை மிதிவண்டி இடைகம்பி அமர்ந்து
நாவில் வாகனம் ஒட்டி சாகசம் காட்டும்

# ஒப்பனையில்லா முகபூச்சும்
வெட்டி விட்ட ரிப்பனும்
சலம்பல் எண்ணெய் தலையும்
கட்டமிட்ட சட்டையுடன்
விண்மீனாய் தெளித்திருக்கும்

#நெடுகிலும் எங்கோ ஒரு வினா
யாரையோ துளைத்தெடுக்கும்.


#அவ்வபோது சட்டைகள் கோர்த்த ரயில் ஒன்று
ஓலி எழுப்பி கடந்து செல்லும்.
சற்று கவனித்தால்
நம் கொண்ட கவலைகள் கலைத்து செல்லும்.

Sunday, April 25, 2010

ஒற்றுமை

அதென்னவோ தெரியவில்லை ...
விருந்தினர் வீட்டிலெல்லாம்
குழந்தைகளிடமான என் கேள்விகள்
இதுவாய் இருக்கிறது!!
நல்ல படிப்பியா ??
என்ன ரேங்க் எடுப்ப ??
அவர்கள் பதில் இப்படியாய்
வந்து விழுகிறது
ம்ம் ..படிப்பேன் ..
முதல் மூன்றிற்குள் எடுப்பேன் என்று !!!!!

Tuesday, March 9, 2010

சிலையின் விம்மல்

உடலெல்லாம் காயம்
பார்த்தவர்களெல்லாம் ரசித்தார்கள் ...

பிரிவுணர்த்தல்

அம்மாவிடம் அடி வாங்கி
ஊரை எழுப்பும் அழுகையுடன்
ஒற்றை திண்ணையில் அமர்ந்திருந்த
குழந்தையின் முன்னால்
கூவி கொண்டே நடக்கும் பலூன்காரனாய்
கை கோர்த்தபடி கடந்தார்கள் காதலர் இருவர் ...
காதலியிடம் ஊடல் கொண்ட என் முன் ...