Followers

Tuesday, July 7, 2009

திருவிழா!!!!

வீதியெங்கும் தோரணம்
மாகோலம்,
மஞ்சள் குளித்த
பெண்கள்கூட்டம் திட்டுகளாய்
பூஜை தட்டுகளுடன் ,
வானவேடிக்கை,
குதிரையாட்டம் ,
ஒயிலாட்டம் கரகாட்டம் ,,,, குதுகலமாய் .... முத்து பல்லக்கில்
காஞ்சி பட்டுடுத்தி ,
சந்தனம் பூசி
கதம்பம் சூடி
அம்பாள் வருகிறாள்
வீதி உலா
என் கவனம் ஈர்த்து
செல்கிறார்கள்
கூட்டத்தில் விளக்கு
சுமந்தபடி செல்லும்
முதியவர் இருவர் ...