Followers

Saturday, December 14, 2013

சிறுபிள்ளைத்தனம்

என் முதல் ரசிகனுக்கு ,

உன் முதல் ரசிகனின் ...

சிறுபிள்ளைத்தனம்

இது கவி அல்ல...

உன்னை பற்றி எழுத அமர்ந்தால்...

திரை மறையும்  வார்த்தைகள் 

தாழ்வு மனப்பான்மை கொண்டு..

காகிதம் இறங்க மறுக்கும் 

பேனா வெட்கத்துடன் ..

இருந்தாலும்இழுத்துவந்தேன்...

வாருங்கள்... மலருக்கு அதன் 

மென்மைகென பூங்கொத்து

கொடுத்து வரலாமென இச்சிறுபிள்ளை தனத்தோடு ……


  • ஆயிரம் குழந்தைகள் 

ஒன்றாக  வயலின் வாசிப்பார்கள்  உன் சிரிப்பில்  
  • எப்படி நெளிந்தாலும் 
உன் புள்ளிகளுக்குள்  தான் நான் கோலமாகிறேன்  
  • என் கனவு திரைப்படங்களின் காதல்  பொழுதுகளின்

 படச்சுருள்கள் கிழித்தெறியபடுகிறது உன்னால் ..
  • உயிரை சாட்டையில் சுற்றி  

சுழற்றும்  கண்கள்

நெருங்க குளிர செய்யும்

கார் கூந்தல்..

அசைவால்  உயிர் கொன்று...'

உணர்வுகள் ஜனனம் செய்யும் கவர்ச்சி

தேன் வாயில் நிரப்பி

வார்த்தையாய்  உமிழும் ஜாலம்

ஒன்றும் இல்லை உன்னிடம்

இருந்தாலும் .. என் ரசனைகளின்

மதிப்பெண் பட்டியலில்...

என்னவளை விட அதிகமாய் நீ...
  • எப்போதும் பணிகிறேன் உன்னிடம் 
காற்றிடம்  ஊடல் கொண்டு 

சலனத்தோடு  மடங்கும்  தென்னங்கீற்றாய் 
  • சில நேரம் சில குணங்கள் 
வெளிப்படும் போது  தெரிபவை 

உன்னை பதிவெடுத்த  சுவடுகள்  


  • என்னையும்  விரட்டி ...விரட்டி 
காதலிப்பவை  உன் நினைவுகள்..
  • இது கவிதை அல்ல,,
அவை உண்மை போர்த்திய  பொய்கள் 

இவற்றில்  ஒன்றும் பொய்யில்லை...


 
ஒருமுறை நானும் நண்பன்  பிராங்க்ளினும்  பேசி கொண்டிருந்த போது ..ஏன்டா ஜானி எப்ப பாத்தாலும் கவிதை  எழுதுறியே  என்ன பத்தி ஒரு கவிதை எழுத கூடாதா என்றான்..அப்போது எழுதியது தான்  இந்த சிறுபிள்ளைத் தனம் என்ற சிறு கவிதை 

என்னை விட அவனை அதிகமாக ரசித்தவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை .. அவன் மனைவி உட்பட..அவனுடைய கோபம்,சோம்பல், மறதி,அறியாமை,கள்ளம்,நடை, பாவனை,கருவிழி மறைத்து இமை மூடி சிரிக்கும் சிமிட்டல் சிரிப்பு,இவன் அனைத்தும் என்னால் இல்லை ....எங்கள் நண்பர் கூட்டம்  டெரிக் ,மற்றும் சத்யாவாலும் ரசிக்கபட்டிருக்கிறது .
இன்று வரை என் சுக துக்கத்திற்கு நான்  பொருள் தேடும் முதல் அகராதி அவன் தான் . நான் என்ன மன நிலையுடன் அவனிடம்  ஒரு பிரச்சினையை சொல்கிறேன் என்பதை அறிந்து அதற்க்கு எது தீர்வு,,அந்த தீர்வை எப்படி என்னிடம்  சொல்ல வேண்டும் என்பதை நன்கு அறிந்து எனக்கு பதில் சொல்பவன்..சிலருக்கு அவனை ஒரு  நல்ல இசையாளானாக  மட்டுமே தெரியும் ஆனால்  அவன் ஒரு அசாத்தியமான  கவிஞன்  ..இசையும் , மற்ற பலஅலுவல்களும்  தான்  அவனிடமிருந்து  பல கவிகளை  களவாடி தீயிட்டு சாம்பலாக்கி  இருக்கின்றன . இந்த பிறந்த நாளில் நண்பனுக்கு ஒரு வேண்டுகோள் .. கருவிகள்  மீட்டும் கையால்  சில நேரம் பேனாவையும் மீட்டு.நல்ல கவிதைகள் கிடைக்கும் தமிழ்  கூறும் நல் உலகுக்கு...

நிச்சயமாக இந்த பதிவை படித்தவுடன் அவன் என்னை அழைத்து கட்டாயம் திட்டுவான்.. இருந்தாலும்  என்றாவது நட்பு என்ற இலக்கியம் என்னால்  எழுத நேரிடுமாயின் பிராங்க்ளின்..சத்யா..டெரிக், சாம்..என்ற வார்த்தைகள் இல்லாமல் எழுதவே முடியாது..அதில் பிராங்க்ளின் அதிக இடங்களில் நான் பிரயோகித்த  வார்த்தையாக இருக்கும்

Monday, August 19, 2013

தேவதைக்கான முதல் மடல்

உன் அழகான சம்பாஷனைகளை பதிவெடுக்க 
புகைப்படக்கருவி வாங்கினோம் 
உன் சம்பாஷனைகள் எல்லாமே அழகாக  இருக்கிறது .

உன் பெயருக்கான பொருள் மட்டும் அல்ல 
நீயே இறைவனின் பரிசு 
.
விதையும்,விளைநிலமும் நாங்கள் 
அறுவடைநீ... அதன் பலன் இந்த வாழ்க்கை .

எங்களையும் வீசியடிப்பாய் உனக்கு 
பிடித்த பொம்மைகள் போல அவ்வபோது  

ஊட்டுவதாய் நீ ஏமாற்றும் 
கைப்பிடிசோறு  நூறாண்டு பசி போக்கும்

பல வார்த்தைகளுக்கு  
உன் பிதற்றல்களில் பொருள்கற்றோம் 

எண்ணமும்எழுத்தை ஏந்தும் காகிதமும் நாங்கள் 
கவிதைநீ ..
இயலும், இசையும் நாங்கள் 
நாடகத்தமிழ்  நீ..
சூரியன் நீ..
உன்னை சுற்றியபடியே எங்கள் உலகம்

Sunday, March 24, 2013

ஒப்புதல் வாக்குமூலம்



உலக வரைபடத்தில் சிதறி கிடப்பது
மட்டும் என் பெருமை

குடல் சரிந்தும் , உடல் பிளந்தும் ,
முளை கிழிந்தும்யோனி விரிந்தும்
உறவுகள் பிணம் குப்பையாய் வீதியில்.

போருக்கு பொருள் விளக்கமும்
வெடிகுண்டின் தன்மையும் அறியாத
மழலையர் பள்ளியில் கொத்து குண்டு வீச்சு.

முள் வேலிக்குள் நீரின்றி வளர்க்கப்படும் மனித செடிகள்
சகியாத காணொளிகள் ஒருபுறமிருக்க
பேயாட பிசாசாட...சூப்பர் சிங்கர் ஓலமும் ,
என் விருப்பமென ..

போரில்
 மடிந்த உயிரின் எண்ணிக்கை எத்தனை
இலக்கம்?? , - கிடக்கட்டும்
என் சம்பளம் ஆண்டுக்கு எத்தனை இலக்கம்
என்பது பெருங் கவலையேன.. வாழும் தமிழன் ,,

.உடல்
 சமைத்து இன உணர்வு பரிமாறிய
முத்துகுமரன் மரணம் செவிப்பறை
கிழிய அறைந்தாலும்..
மது... மங்கை . மயக்கமே   கொள்கையென
இருந்த தமிழன் ...

நாய்
 சிங்களன் தமிழ் இரத்தம் குடிக்க
குவளை எடுத்து கொடுக்கிறான் இந்தியன் ஒருவன்
உணர்வின்றி .. ஏட்டு சுரைக்காய் கவி எழுதுகிறான்
தமிழ் , தமிழரல் வளமை சேர்த்த நம் ஆண்டவன் ..
ஆண்டவனின் உலக சாதனை உண்ணா விரதம் பார்த்து
மெச்சின .. தமிழன் ..

கானல்
 உலகில் ..கன்னியை கட்டிபிடிக்க
அட்டை கத்தி ,சண்டை போட்டவனெல்லாம் தலைவனாக
இழந்த உரிமை மீட்க ஆயுதம் கண்ட தலைவனை தீவிரவாதி
 என்னும் சுய அறிவிலி தமிழன் ..
சாதிக்கும்,மதத்துக்கும்,நடிகனுக்கும்,அலையென கூடினாலும்
இன மீட்பிற்கு ஒன்றாய் கூடாமல் அமைதி காத்த  தமிழன் 

இனம் அழிவதை கண் முன்னால் கண்டும்
உறவுக்கு தோளும் உரிமைக்கு குரலும் தருவேன்
வெற்று பேச்சிலே காலம் கழித்த தமிழன் 

போர்  குற்றமல்ல …. மக்களுக்காக போராடாமல் 
பெரூங்குற்றம் பண்ணிய  தமிழன்  நான் தான்

முதல் குற்றவாளி !!!!


குறிப்பு :

இந்த புலம்பல் கடந்த 2009ம் ஆண்டு எழுதியது..இன்றும் எனக்கு இந்த மனக்கவலை உண்டு ஈழ தமிழர்களுக்காக  வீதியில் இறங்கி போராடவில்லை என்று...இப்பொழுது தமிழ் நாட்டில் நடக்கும் பல்வேறு மாணவர் போராட்டங்களை பார்க்கும் போது நான் படிக்கின்ற காலங்களில் எத்தனையோ கொடுமைகள்  நடந்தும் கண்டும் காணமல் ,போராட்ட குணமேஇல்லாமல் இருந்ததை  எண்ணி  மிகவும் கூனி குறுகி வெட்கபடுகிறேன். இப்போதைய இளம் தலைமுறையை பார்த்து மிக பெருமை அடைகிறேன்..வெல்லட்டும் என் தம்பி, தங்கைமார்களின்  போராட்டம் .