Followers

Sunday, June 1, 2014

அவர் என்னுடனே இருக்கிறார்

அவர் என்னுடனே  இருக்கிறார்

நண்பர்களுடனான சந்திப்பில் 
உரையாடல் காலத்தின்
பாதியை , தன் கையில் அள்ளிக்கொண்டு 

நெடுந்தூர  பயணங்களில் 
செவிக்குள் வந்தாடும் தென்றலாய் 
களைப்பு போக்கியபடி 

அலுவலகத்தின் பின் மாலைப் பொழுதுகளில்
என் மேசை மிது  துள்ளி
வேலை அழுத்தங்களை இலகுவாக்கி

தனிமை மனதை ஈரமாக்கும் போது 
என் மடிக்கணினி  வழியே மனதை உலர்த்திய படி 

துக்கம், தூக்கத்தை தடை படுத்திய இரவுகளில் 
நான் விபரமறிந்து அதிகம் கேட்ட 
தாலாட்டுக்களை  செவியருகில் பாடியபடி 

மொசார்டையும் , பீத்தொவானையும் ,
அறிமுகம் செய்து ....இசையரியா 
எளியவர் வாயிலும் 
சங்கராபரணம் கொண்டு சேர்த்த 

இசையின் பெரிய ராஜா

அவர் எப்போதும் என்னுடனே இருக்கிறார் - இசையாய்




Saturday, May 17, 2014

அரசியல் கொலை

நாங்கள் தான் செய்தோம்..

அந்த வரலாற்று நிகழ்வை ..

இனம் அழித்த கொடுங்கோலர்களின் கை 

முறித்து..உயிருடன் குழி புதைத்தோம் .

எம் மறதி மூலதனத்தில் பதவி கண்டு 

குடும்பம் காத்த ...இனத்துரோகி ,

மறுபடியும் கரையேற பிச்சை கேட்க 

 கட்டுமரத்தை ..கல்லை கட்டி கடலில் போட்டோம் .

உண்ட மதுவின் மயக்கத்துக்கு 

எம்மை ஊறுகாய் என நினைத்தவனின் 

செவி கிழிய முரசறைந்தோம் ..

கொள்கை குழப்பத்தில்  சேராத இடம் 

சேர்ந்த எங்கள் பம்பரத்தை ...

வட்டத்தை விட்டு வெளி தள்ளினோம் 

சாதி .. மீதேறி  சுக ஊர்வலம்  வந்தவர்கள் 

வீதி பிரிக்க எடுத்த முயற்சி உடைத்து 

சாணம்  முகம் நனைய துரத்தி அடித்தோம் ( தர்மபுரி மக்கள் இன்னும்தங்களை  தமிழராக  உணரவில்லை   )

போருக்கு செல்லா ..வாய்ச்சொல்  வீரர்கள்

எங்கள்செவ்வாடை தோழர்கள் 

இடம் மாறி ..மாறி  .வாசிக்கும்  பக்கவாத்தியத்தின் 

இசை வெறுத்து  , உள்  நுழைய  சிவப்பு விளக்கு  காட்டினோம் 


இந்த சாக்கடையை சுத்தம் செய்ய 

வட இந்திய துடைப்பம் சரிவராதென 

வீட்டின் மூலையில் வைத்தோம் 


பரமன் வந்தார் ..பாரதம் காக்க 

என்ற கட்டுக்கதை  காவி ..பேடி அலையை 

எங்கள் வீட்டு  வாளிக்குள் அடைத்து 

பெரியாரின் பெயர் காத்தோம் ..

எங்கள்  வாக்கு  சீட்டு  ஆயுதம்  குத்தி கொன்ற

 இன விரோதிகள் இங்கே கிடக்கிறார்கள் 

குற்றுயிராய் ... பாருங்கள்  இந்தியர்களே..

இந்துவாக, முசுலிமாக, கிறித்துவனாக ,, சாதியாக பிரியாமல் 

                "ஓர் தமிழனாக "


நாங்கள்  தான் செய்தோம்  இந்த வரலாற்று நிகழ்வை ..