# காலையில் அழுகையும்
மாலையில் குதூகல கூச்சலும் சங்கமிக்கும்.
# குச்சி ஐசும்,பஞ்சு மிட்டாயும்
இலந்தை வடையும் , கீற்று மாங்காயும்,
குழாய் அப்பளமும் பெரு வணிகமாகும்.
# சிலேட்டு குச்சியும்
காகித பென்சிலும்
மாற்று பொருளாகும்.
# அரை சீவல் தலையும், ஒழுகும் மூக்கும்
அம்மா இடை அமர்ந்து அக்கா அழுகை ரசிக்கும்.
#தந்தை மிதிவண்டி இடைகம்பி அமர்ந்து
நாவில் வாகனம் ஒட்டி சாகசம் காட்டும்
# ஒப்பனையில்லா முகபூச்சும்
வெட்டி விட்ட ரிப்பனும்
சலம்பல் எண்ணெய் தலையும்
கட்டமிட்ட சட்டையுடன்
விண்மீனாய் தெளித்திருக்கும்
#நெடுகிலும் எங்கோ ஒரு வினா
யாரையோ துளைத்தெடுக்கும்.
#அவ்வபோது சட்டைகள் கோர்த்த ரயில் ஒன்று
ஓலி எழுப்பி கடந்து செல்லும்.
சற்று கவனித்தால்
நம் கொண்ட கவலைகள் கலைத்து செல்லும்.
2 comments:
இதிலே எழுதப்பட்டிருக்கும் நிறைய வரிகளை ரொம்பவே ரசித்தேன்.. வார்த்தை உபயோகித்த விதமும், சொற்களின் அலங்காரமும் அழகு..!! குறிப்பாக நான் ரசித்த சில வரிகள்..!!
//அம்மா இடை அமர்ந்து அக்கா அழுகை ரசிக்கும்.//
//தந்தை மிதிவண்டி இடைகம்பி அமர்ந்து
நாவில் வாகனம் ஒட்டி சாகசம் காட்டும்//
//நெடுகிலும் எங்கோ ஒரு வினா
யாரையோ துளைத்தெடுக்கும்.//
//அவ்வபோது சட்டைகள் கோர்த்த ரயில் ஒன்று
ஓலி எழுப்பி கடந்து செல்லும்.
சற்று கவனித்தால்
நம் கொண்ட கவலைகள் கலைத்து செல்லும்//
உன் கருத்துகளுக்கு நன்றி பால் .
Post a Comment