Followers

Tuesday, March 9, 2010

சிலையின் விம்மல்

உடலெல்லாம் காயம்
பார்த்தவர்களெல்லாம் ரசித்தார்கள் ...

2 comments:

Paul said...

இது போன்ற சிந்தனைகள் முன்பே தோன்றியிருந்தாலும், 'அடடே.. இப்படி சொல்ல நமக்கு தோன்றவில்லையே..' என்று யோசிக்க வைத்தது இந்த கவிதை..

நான்கெழுத்து.. இரண்டு வரி.. ஆனால் மனதிற்குள் தட்டி விடப்பட்ட ஆயிரக்கணக்கான சிந்தனைகள்.. கவிதைகள் அழகானவை என்பதற்கு உதாரணமாக சில கவிதைகள் உண்டு.. அவற்றில் இதுவும் ஒன்று..

J said...

அழ‌கு !!

'அடடே.. இப்படி சொல்ல நமக்கு தோன்றவில்லையே..' என்று யோசிக்க வைத்தது இந்த கவிதை..
- same feeling...

இன்னும் கொஞ்ச‌ம்
விம்மியிருக்க‌லாம்..

---->
க‌ன்ன‌ம் தொடுவ‌தும்
இடைக் கிள்ளுவ‌தும்
ஆரிய‌ காய‌த்தில்
சின்ன‌தாய் கீறல்..

எனை சிரித்த‌ப‌டி
செதுக்கிய‌தால்
அழுவ‌து தெரிவதே இல்லை..

நான் கூட‌ ப‌ர‌வாயில்லை ‍‍

கைகால் அசையாத‌
கர்ப்ப‌கிர‌க‌ சிலையை
பார்ப்ப‌வ‌ரெல்லாம்
வேண்டி செல்கிறார்க‌ள்..
இது வேண்டும்..அது வேண்டுமென்

நின்றப‌டி வாழ்கிறோம்
நின்றப‌டி சாகிறோம்
வாங்கி வ‌ந்த‌ வ‌ர‌ம் அப்ப‌டி..

- ஜெய‌ராம்
ந‌ன்றி !!
ரொம்ப‌ நாள் க‌ழித்து
என் பேனா உ(ரை)டை க‌ளைந்த‌து.