Followers

Wednesday, July 27, 2016

ஓர் வரலாற்றின் முதல் வரி



பாலையில் ஊறிய

கிளை நதியொன்று ,

பெருங்கடல் கலக்கிறது.

இருள் சூழ் கூட்டத்தின்

இரண்டாம் சுடரென

பேரொளியின் ஒருபுள்ளி

பெருவெளிச்சத்தின்

சுடர் விடுகிறது .

கரும் புலியொன்று

அறிவாயுதம் பழக

கல்விக்களம் நுழைகிறது.

வாயாடல் உலகமொன்று

வகுப்பறைக்குள் சுழல

தன் இயக்கம் துவங்குகிறது

எல்லாருக்குமான நீல மேகம்

வறன்டவர் நிலங்களில்

வசந்த மழை தர விரைகிறது .

இல்லாமை புத்தகத்தை

முழுதாய் படித்தவனின்

கவிதையொன்று

எளியவர் வாழ்வகராதியில்.

இல்லாமை எனும் சொல் தேடி

அழிக்கப் புறப்படுகிறது .

இப்படியாக ஒரு வரலாற்றின் முதல் வரி எழுதப்படுகிறது

"மகள் பள்ளிக்கு செல்கிறாள் "







2 comments:

varan said...

மகள் பள்ளிக்கு செல்ல நல்ல ஒரு புலம்பல்...
அதென்ன பாலையில் ஊறிய நதி?
இரண்டாம் சுடர் விளக்கம் வேண்டுமே!
சிறப்பான முகப்பு... ஓர் வரலாற்றின் முதல் வரி...
"இல்லாமை புத்தகத்தை

முழுதாய் படித்தவனின்

கவிதையொன்று..."
இது மனதை வருடுகிறது யோவானி !

ஜானி பிரகாஷ் said...

thank you father...