அவர் என்னுடனே இருக்கிறார்
அலுவலகத்தின் பின் மாலைப் பொழுதுகளில்
என் மேசை மிது துள்ளி
வேலை அழுத்தங்களை இலகுவாக்கி
நண்பர்களுடனான சந்திப்பில்
உரையாடல் காலத்தின்
பாதியை , தன் கையில் அள்ளிக்கொண்டு
நெடுந்தூர பயணங்களில்
செவிக்குள் வந்தாடும் தென்றலாய்
களைப்பு போக்கியபடி
அலுவலகத்தின் பின் மாலைப் பொழுதுகளில்
என் மேசை மிது துள்ளி
வேலை அழுத்தங்களை இலகுவாக்கி
தனிமை மனதை ஈரமாக்கும் போது
என் மடிக்கணினி வழியே மனதை உலர்த்திய படி
துக்கம், தூக்கத்தை தடை படுத்திய இரவுகளில்
நான் விபரமறிந்து அதிகம் கேட்ட
தாலாட்டுக்களை செவியருகில் பாடியபடி
மொசார்டையும் , பீத்தொவானையும் ,
அறிமுகம் செய்து ....இசையரியா
எளியவர் வாயிலும்
சங்கராபரணம் கொண்டு சேர்த்த
இசையின் பெரிய ராஜா
அவர் எப்போதும் என்னுடனே இருக்கிறார் - இசையாய்
அவர் எப்போதும் என்னுடனே இருக்கிறார் - இசையாய்
No comments:
Post a Comment